சென்னை: மெட்ரோ ரயில் பணி மற்றும் பிரதாரன குழாய் பராமரிப்பு பணி காரணமாக, சென்னை  புரசைவாக்கம், ஓட்டேரி உள்பட 4 மண்டலங்களில் அடுத்த 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை  குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் பணிக்கா பூமிக்கடியில் பள்ளம் தோண்டப்படுவதால், பல பகுதிகளில் மெட்ரோ வாட்டர் செல்லும் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி,  அதைத்தொடர்ந்து சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மெட்ரோ வாட்டம் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

CMWSSB சார்பில் பிரதானக் குழாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 27.05.2022 அன்று காலை 10.30 மணி முதல் 29.05.2022 காலை 10.30 மணி வரை பகுதி-5, பகுதி-6, பகுதி-8 மற்றும் பகுதி-9-க்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதனால், வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, பெரம்பூர், புதுப்பேட்டை, புளியந்தோப்பு, கெல்லிஸ், நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, அயனா வரம், கீழ்ப்பாக்கம் கார்டன், சேத்துபட்டு, டி.பி. சத்திரம், வில்லிவாக்கம் மற்றும் திருவல்லிக்கேனி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர் விநியோகத்திற்கு, பகுதி பொறியாளர்களை 8144930905, 8144930906, 8144930908 மற்றும் 8144930909 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.