டெல்லி: டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தயாரித்துள்ள  2-DG, கொரோனா எதிர்ப்பு மருந்து இன்று வெளியிடப்பட்டது. இதை  மத்திய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளான ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் இணைந்து வெளியிட்டனர்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் வகையில்,   சித்தா,, ஓமியோபதி, ஆயுர்வேத  மருந்துகளும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

இந்த மருந்தை  கடந்த ஆண்டு முதல் சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் இணைந்து  உருவாக்கி வந்தனர். பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீர் கலந்து குடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தானது  பல்வேறு கட்ட  சோதனைகளை கடந்து வந்துள்ளது.   இந்த மருந்தில் உள்ள  டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) மருந்தின் மூலக்கூறுகள் கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது  உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மருந்து மீதான ஆய்வை,   டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை 3 கட்டங்களாக கொரோனா நோயாளிகளிடம் நடத்தின.

ஆய்வில்,நல்ல முன்னேற்றம் கண்டறியப்பட்டது. இந்த மருந்ந்தானது நோய் பாதிப்பு உள்ளவர்களின்  உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், கொரோனா நோயாளிகளும் விரைவில் குணமடைந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த மருந்தை  இந்தியாவில்  அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து,   டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) மருத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இணைந்து வெளியிட்டனர்.

முதல்கட்டமாக 10,000 டி-டியோக்ஸி டி-குளுகோஸ் மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த மருந்துகள் முதல்கட்டமாக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு விநியோகம் செய்யப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மருந்து டெல்லி எய்ம்ஸ் தலைவரிடம் மத்திய அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,  டிஆர்டிஓவின் கோவிட் எதிர்ப்பு மருந்து 2-டிஜி மீட்பு நேரம், ஆக்ஸிஜன் சார்பு ஆகியவற்றைக் குறைக்கும் என்று தெரிவித்தார்.