சென்னை: பிறந்த தேதியை விட்டு, பெயர் வைத்த தேதியை கொண்டாடுவதுதான் திராவிட மாடல் ஆட்சி என நாம் தமிழர் கட்சி தலைவர்  சீமான்  கூறினார்.

“தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டம் நடத்தப்பட்டு,  தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாள் நவம்பர். இதை தமிழ்நாடு நாள் என கூற வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை ஆளும்  திராவிட கட்சிகள்  மாறாக 1967ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் நாள்தான் தமிழ்நாடு  என தமிழ்நாடு அரசு கூறி வருகிறது.  இதை தமிழர் அமைப்புகள் உள்பட சில கட்சிகள்  ஏற்க மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் சோழிங்க நல்லூரில்  நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் (அக்டோபர் 1) பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  சிறப்புரை ஆற்றினார். அப்போது,  திமுகவை கடுமையாக சாடியவர், அண்ணா பெயர் வைத்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவார்களாம். ஸ்டாலின், உதயநிதி எல்லாம் அவர்கள் பிறந்த தேதியை கொண்டாடாமல் பெயர் வைத்த தேதியை தான் கொண்டாடுவார்கள் அதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி என விமர்சித்ததுடன்,   நானும், கோட்டையில் ஒருநாள் தேசிய கொடியை ஏற்றுவென். அப்போது,  இந்த காலத்தை நான் உருவாக்குவேன் என்றார்.

தொடர்ந்த பேசியவர்,  “திராவிடம் என்பது தமிழகம் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்ட ஒன்று. ஆனால், இன்று இதை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறார்கள்.  திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம். அதிமுக என்றால் அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்”எனச் சாடியுள்ளார்.

அரசியல் குறியீடாக, அடையாளமாக முத்துராமலிங்க தேவரை இந்த திராவிட காட்சிகள் மாற்றிவிட்டது. அவருக்கு மாலை அணிவித்துவிட்டால் தேவர் வாக்குகள் எல்லாம் வந்து விடும் என்று நினைக்கிறார்கள்” என்றவர்,  சென்னை  கடற்கரை கல்லறைகளின் கடற்கரையாக மாறி வருகிறது.  கடற்கரை எவருடைய கல்லறையாகவும் இருக்க முடியாது. கடற்கரையாக தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர்,  தற்போதைய ஆட்சியாளர்கள் “சாலை, மருத்துவமனை, நூலகம் அனைத்திற்கும் கருணாநிதி பெயரை சூட்டுகின்றனர்”, ஏன் வேறு எந்த தமிழ் அறிஞர்களின் பெயர்களே இல்லையா என் கேள்வி எழுப்பியவர், தமிழ்நாட்டில்,  “கொசுவையே இவர்களால்  ஒழிக்க முடியவில்லை, ஊழலை ஒழிக்க போகிறார்களா ?, ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற அளவிற்கு வேலை கொடு” என  காட்டமாக பேசினார்.

தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசியவர்,  “ஜெயலலிதா அவர்கள் தனியாக நின்று வென்றார்கள் என்றால் என்னால் தனித்து நின்று வெல்ல முடியாதா, நான் தற்காலிக தோல்விக்காக, நிரந்தர வெற்றியை இழக்க போவதில்லை.

இவ்வாறு கூறினார்.