சென்னை:  நடிகர் விஜய் நடித்த லியோ பமடத்தின் வெற்றிவிழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில்,  2026 ல புட்பால் மச் இருக்குனு சொல்லுவேன். இன்னும் சீரியஸா சொல்லனுமான, அப்போது,  கப்பு முக்கியம் பிகிலு என கூறினார்.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்துக்கு பல்வேறு தடங்கல்கள் கொடுக்கப்பட்ட நிலையில்,  பல சர்ச்சைகைளை தாண்டி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் கடந்த அக்டோபர் மாதம் 19ந்தேதி வெளியானது.  இந்த படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளதுடன், லலித் தயாரித்துள்ளார். இந்த படித்தில், விஜய்க்கு ஜோடியாக  திரிஷா நடித்துள்ளார். மேலும் பிரபல இந்தி நடிகர்  சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக  சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்ததாகவும், முதல் 7 நாட்களில் ரூ.461 கோடியும் 12 நாட்களில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக  படக்குழு அறிவித்தது. ஆனால் பட வெளியீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த லியோ படத்தால் தங்களுக்கு பெரும் நஷ்டம் என கூறி வரகிறார்.

இந்த சூழலில், லியோ படத்தின் வெற்றிவிழா  நேற்று (நவம்பர் 1ந்தேதி)  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்,  திரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், ரசிகர்களை புகழந்து தள்ளியதுடன்,  “எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கொடுக்குற அன்புக்கு நான் என்ன செய்யப் போறேன்… உங்க உடம்புக்கு செருப்பாக தச்சு போட்டா கூட ஈடாகாது. கொஞ்ச நாளா சோசியல் மீடியால பாக்கறேன் என்றார். தொடர்ந்து பேசியவர் சற்று அரசியல் கலந்து பேசியவர், ரசிகர்களின்  போஸ்டர் எதிர்ப்பு குறித்து கூறினார். அப்போது, கோவம் லாம் அதிகமா இருக்கே, ஏன் யார் மனசையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலைகள் இருக்கு. வீட்டுல அப்பா அடிக்கிற புள்ள என்ன பண்ணும். அது மாதிரி நினைச்சு விட்ருங்க…

காந்தி சொல்ற மாதிரி தான் `non violence is powerful than violence’. ஸ்கூல், காலேஜ் பக்கத்துல தான் வயின் ஷாப் இருக்கு..  அவுங்க என்ன அடிச்சுட்டு போறாங்களா. அவுங்கலாம் ரொம்ப தெளிவு. என் படம் நல்லா இல்லைனாலும் நல்ல இல்லைன்னு போயிடறாங்க. உங்கள்ல பலர் சொல்லமையே பல விஷயங்கள் செய்றீங்க என்று பேசினார் விஜய். லோகேஷ் உங்கள் கட்சியில் இணைந்தால் என்ன பதவி கொடுபீர்கள் என கேட்டதற்கு , போதை பொருள் ஒழிப்பு துறை கொடுப்பேன்.

கல்வி அனைவருக்கும் சரி சமமாக கிடைக்கனும். மக்கள் பிடிச்சா தட்டி கொடுப்பார்கள். பிடிக்காவிட்டால் தட்டி விடுவார்கள்.

2026 பத்தி சொல்லனும்னா நீங்க என்ன சொல்லுவிங்க என்ற கேள்விக்கு பதில் சொன்ன விஜய், 2025 க்கு பிறகு 2026 என்று சொல்லுவேன். சீரியஸா சொல்லனும்னா என்ன சொல்லுவிங்க, 2026ல புட்பால் மச் இருக்குனு சொல்லுவேன். இன்னும் சீரியஸா சொல்லனுமான என்ன சொல்லுவிங்க. அப்போது தான் கப்பு முக்கியம் பிகிலு என பதில் அளித்தார் விஜய்.

அதேபோல சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கும் பதில் அளித்து பேசினார். அப்போது, புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான். தளபதி க்கு அர்த்தம் தெரியுமா? நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி” என்று தனது ஸ்பீச்சில் வழக்கம் போல அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.