சென்னை: சென்னையில் வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று இந்து மக்கள் சார்பில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்  கடந்த இரு மாதங்களுக்கு முன்பு  சனாதன ஒழிப்பு மாநாட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை அழிப்போம் என பேசினார். இருது நாடு முழுவதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் உள்பட பல மாநில நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  அமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிக்கும் வகையில் சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த மாநாடு சென்னையில்  வரும் நவம்பர் 1-ம் தேதி  நடைபெறும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார்.

சென்னையை அடுத்த புறநகர் பகுதியான அன்னூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். சாமி இல்லை என சொல்லும் திராவிட கட்சிகளை புறக்கணித்து வருகின்றனர். இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரை மூலம் வெளிப்பட்டு வருகிறது.

தி.மு.கவையும், அ.தி.மு.கவையும் வேண்டாம் என்று நினைப்பவர்கள், லஞ்ச ஊழலை எதிர்ப்பவர்கள் ஒரு அணியாக திரண்டு வருகின்றனர். இந்த அரசியல் மாற்றத்துக்கு, இந்து மக்கள் கட்சி துணை நிற்கும்.

காவிரி ஆணையம், நீதிமன்ற உத்தரவை அவமதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. அதை கேட்க திராணியற்ற நிலையில் இங்குள்ள திமுக அரசு உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்துள்ள  வே, கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, வரும் நவம்பர் 1-ம் தேதி சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்றார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆகஸ்டு 27ந்தேதி திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அதன் நிர்வாகிகள் பாரிசாலன் உள்பட பலரை காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை காட்டி கைது செய்த நிலையில், அந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்து மக்கள் கட்சி திராவிட ஒழிப்பு மாநாடு நடத்தப்போவதாக அறிவித்து உள்ளது.

‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

Daily Tamil News – www.Patrikai.com