கமல் அரசியல் பயணம் தொடங்கியதை தான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என ரஜினி தெரிவித்துள்ளார்.

கமல் ரஜினி இருவருமே அரசியலுக்கு வருவார்களா, முழுமையாக ஈடுபடுவார்களா என்ற கேள்வி தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ரஜினி அறிவித்தார்.

அதே நேரம் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த கமல், அமெரிக்கா சென்று தனது பட வேலைகளில் மூழ்கினார். ஆகவே அவர் தீவிர அரசியலில் குதிப்பாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், திடீரென வரும் பிப். 21ம் தேதி கட்சிப் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தைத் துவங்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பதில்கள்.. எம்ஜிஆர் கொள்கையை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றனவா? நிச்சயமாக.. ஓரளவு பின்பற்றுகின்றன. நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி அறிவிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல் அரசியல் அறிவிப்பை நீங்கள் எதிர்பார்த்தீர்களா? இல்லை. நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களும் கமலும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? அதற்கு காலம் தான் பதில் அளிக்கும். பார்க்கலாம்.

சட்டமன்றத் தேர்தலை சந்திப்பேன் என்றீர்கள். ஒருவேளை முன்னதாகவே.. அதாவது ஆறே 6 மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா? நிச்சயமாக சந்திப்பேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்