சென்னை: விதிகளை மீறி தமிழகஅரசு வெளியிடப்பட்ட மருத்துவர் பணி ஆணையை, எதிர்ப்புகளால் இரவோடு இரவாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளதாக  மருத்துவசங்க தலைவர் ரவீந்திரநாத்  கூறி உள்ளார்.

தமிழக சுகாதாரத்துறையில் விதிகளை மீறி மருத்துவர் உள்பட பல்வேறு பணி தொடர்பாக அரசாணை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அந்த அரசாணையை இரவோடு இரவாக தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கூறிய மூக சமத்துவத்திற்கான மருத்துவசங்க தலைவர் டாக்ட்டர் ரவீந்திரநாத், தமிழக அரசு , இடமாறுதல் உத்தரவு மற்றும் பணி நியமன உத்த்ரவு போன்ற போன்றவைகளில் நேர்காணல் நடத்தாமல் நேரடியாக பனி நியமனம் செய்து வருகிறது, அதுபோல புதிய பணி நியமனங்களும் இடஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் நடத்தி வருகிறது. இது மிக பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டியவர், பணி நியமனங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன்மூலம் பணி நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

சமீபத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு சரியான முறையில் இடஒதுக்கீட்டின்படி பணி நியமனம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நியமனங்களில் ஏராளமான விதி மீறல்கள் செய்யப்பட்டுள்ள.  அதுபோல மினி கிளினிக் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை எழுந்துள்ளது. இதை நீதிமன்றமும் கண்டனம் செய்துள்ளது.  இதன் காரணமாக, தற்போது, தமிழகஅரசு, மருத்துவர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்துள்ளது என்று தெரிவித்தார்.