தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மருந்தை அரசு விற்பனை செய்து வந்தாலும் இந்த மருந்தை வாங்க பெரும் போட்டி நிலவுகிறது.

ரெம்டெசிவிர் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசே ஏப்ரல் மாத இறுதியில் இதன் விற்பனையைச் சென்னையில் துவங்கியது.

உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த மருந்தால் இறப்பு குறைவதோ, வென்டிலேட்டரின் அவசியம் குறைவதோ இல்லை என ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாகக் கூறியது. விரைவில் உடல்நலம் தேறுவதில்கூட இந்த மருந்துக்கு பங்கில்லை என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் நடிகை மற்றும் டாக்டர் ஷர்மிளா :
தடுப்பூசி ஒண்ணுதான் பாதுகாப்புன்னு சொல்றான், ஆனா அதை போட்டுக்க மக்கள் தயங்குறாங்க

ரெம்டெசிவீர் மருந்தால் பெரிய பலன் எதுவுமில்லன்னு சொல்றான், ஆனா அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுது

உங்கள் புரிஞ்சுக்கவே முடியலப்பா என தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் .