மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கொரோனா உறுதி….!

Must read

 

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதேபோல் தெலுங்கு, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்துக்கான தெலுங்கு, மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

மலையாளத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் வாரத்தில் புதன்கிழமை தோறும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த வாரம் பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

 

 

More articles

Latest article