ஒரு செல்ஃபி எடுத்து போட்டது குத்தமா….? நொந்து போன மனோபாலா….!

Must read

படுத்திருக்கும் போது எடுக்கப்பட்ட தனது செல்பி புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் மனோபாலா வெளியிட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எண்ணிய நெட்டீசன்கள், “என்ன சார் ஆச்சு, கொரோனாவா?, உடல்நிலையை பார்த்துகொள்ளுங்கள்” என கமண்ட் பண்ண தொடங்கினர். விரைவில் நலமடைய வாழ்த்துக்கள் எனவும் சிலர் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகவே தனக்கு ஒன்றும் இல்லை என மனோபாலா விளக்கம் அளித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அன்பு மக்களே…நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை…அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..” என பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article