னிதரின் ஆழ் மனதில் உள்ள எண்ணங்கள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும். வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைக்கப்படும் பொன்மொழிகள் மூலமாகவோ தங்களது வாகனத்தில் எழுதிவைத்திருக்கும் வாசகங்களாலோகூட ஒருவரது லட்சியத்தை, எதிர்கால திட்டத்தை, அவர்களது குணதிசியங்களை தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவரது வாட்ஸ்அப் எண்ணில் பதியும் வாசகங்களும் அப்படித்தான்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்களில் பேராதரவை பெற்று வரும் நடிகர், பாடலாசிரியர் சிநேகனின் வாட்ஸ்அப் எண்ணில் இருக்கும் வாசகம் என்ன தெரியுமா?

”என்னைத் தவிர வேறு யாரிடமும் என்னை தோற்கவிட மாட்டேன்!”

சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு ரயிலேறும்போதே தெளிவான முடிவுடன்தான் வருகிறார்கள் போலிருக்கிறது!

எப்படியோ வாழ்த்துகள் சிநேகன்!

(இது ஒரு செய்தியா என்று கேட்கும் சிலருக்கு இப்போதே பதில் சொல்லிவிடலாம்.

ஓவியா வீட்டு நாய்க்குட்டி.. அதன் பெயர்… அதை எப்படி ஓவியா கொஞ்சுவார்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை அந்த நாய் எப்படிப் பார்க்கிறது என்பதெல்லாம் வீடியோ பேட்டியாக பாரம்பரிய ஊடகங்கள் வெளியிடுகின்றன.

”என்னைத் தவிர வேறு யாரிடமும் என்னை தோற்கவிட மாட்டேன்!” என்று சிநேகன் வைத்திருக்கும் லட்சிய வார்த்தைகளை வெளியிடுவது தவறா, என்ன?)