பா.ஜ.கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் பூனம் மஹாஜன் எம்.பி மற்றும் தமிழ்நாடு இளைஞர் அணித் தலைவர் விநோத் செல்வம் உள்ளிட்டோர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தனர்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவக்குவார் பரபரப்பாக செய்திகள் கிளம்பின. அதற்கேற்ப ரஜினியின் பேச்சுக்கள் இருந்தன. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை மட்டுமின்றி, தன்னை விமர்சித்த நடிகை கஸ்தூரி, விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, செய்தியாளர்கள் சிலரையும் அரசியல் ஆலோசனைகள நடத்தி பரபரப்பை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு தற்போது அடங்கியிருக்கிறது.
இந்த நிலையில் பாஜ கட்சியினஅ தேசிய இளைஞரணி தலைவர் பூனம் மஹாஜன் எம்.பி. தமிழ்நாடு இளைர் அணித்தலைவர் விநோத் செல்வம் உள்ளிட்டோர் இன்று ரஜினியை சந்தித்தனர்
ஏற்கெனவே அரசியல் பிரமுகர்கள், செய்தியாளர்கள், நடிகை கஸ்தூரி ஆகியோரிடம் அரசியல் ஆலோசனை செய்த ரஜினி, இன்று பாஜக பிரமுகர்களிடமும் அசியல் ஆலோசனை செய்தாரா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா என்ற விவரம் தெரியவில்லை.