சென்னை: அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தீவிரமடைந்த நிலையில், அ.தி.மு.க.வை யாரும் விமர்சிக்ககூடாது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,  தமிழக பாஜகவினக்கு ஜேபி நட்டா வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு, அதிமுக பாஜக இடையே உரசல் ஏற்பட்டது. இது சமீபகாலமாக தீவிரமடைந்துள்ளது. பாஜகவின் ஊடகப்பிரிவு தலைவர் உள்பட பலரை அதிமுக தன்பக்கம் இழுந்துள்ள செயலால் இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.  பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை விமர்சித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பா.ஜ.க.வினர் எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அ.தி.மு.க.- பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இருதரப்பு ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். மேலும், போராட்டங்களும் நடத்தின.

இந்j நிலையில்தான்  பாஜகவில் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா கடந்த 10-ந் தேதி தமிழ்நாடு வருகை தந்தார்.  தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர், மாநில பாஜக தலைவர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்தார். மேலும் கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜே.பி. நட்டா, தமிழக பா.ஜ.க.நிர்வாகிகளுக்கு  வாய்ப்பூட்டு போட்டுள்ளார். கூட்டணி கட்சியான அதிமுகவை யாரும் விமர்சிக்க வேண்டும் என  கண்டிப்பான சில அறிவுரைகள் வழங்கி உள்ளார். அதன்படி, அ.தி.மு.க.வுடன் நாம் சுமுக உறவை வைத்துக்கொள்ள வேண்டும். அ.தி. மு.க. தலைமை குறித்தோ, தொண்டர்களை பற்றியோ யாரும் எந்தவித குறையும் சொல்ல வேண்டாம். இதனை தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பின்பற்றி நடக்கவேண்டும். இதனை யாரும் மீறி நடக்கக்கூடாது என்று வலியுறுத்தி, அதிமுக பாஜக மோதலுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

. ஜே.பி. நட்டாவின்  இந்த நடவடிக்கை மூலம்  வருகிற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்பது உறுதியாகி உள்ளது.