சென்னை: வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும்,  22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-03-2023 செவ்வாய்க்கிழமை சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” மாலை 5.00 மணி அளவில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதனிடையே, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-03-2023 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.