இன்று.. திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்: யாருக்கு ஆதரவு?

Must read

சென்னை:

ன்று மாலை 5 மணிக்கு திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற இருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக திமுகவின் உயர்நிலை குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பன்னீருக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், சசிகலா அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரி வருகிறார். தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வமோ, தன்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாக புகார் கொடுத்ததையடுத்து பரபரப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் சசிகலா தரப்பினரால் விடுதியில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டால் திமுகவின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்… யாருக்கு ஆதரவு தெரிவிக்கக வேண்டும் என்பது குறித்து, இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

தற்போது  ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மூத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

இதுபோன்ற பிரச்சினை ஏற்கனவே  ஹிமாச்சல மாநிலத்தில் ஏற்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்தும் ஆராயப்பட்டது.

மாநிலத்தை ஆண்டுவரும் முதல்வருக்கு போதிய மெஜாரிட்டி இல்லையென்றால், அடுத்த மெஜாரிட்டி உள்ள சட்ட மன்ற குழுத்தலைவரை அழைக்க வேண்டும் என்றும், அதன்பிறகு சட்டமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பின்படி சபாநாயகரின் முடிவே இறுதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மூன்றில் இரண்டு மடங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் அவர் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் உயர்நிலை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. யாருக்கு ஆதரவு கொடுக்கலாம்… அல்லது திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்கலாமா? என விவாதிக்கப்பட இருக்கிறது.

ஏற்கனவே முதல்வர் பன்னீர் செல்வத்துக்ழு ஆதரவு என துரைமுருகன், சுப்புலட்சு ஜெகதீசன் போன்றோர் கருத்து கூறியிருந்த நிலையில், ஆரம்பத்தில் ஓபிஎஸ் -க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்த மு.க.ஸ்டாலின், பின்னர் மறுத்து கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் இன்றைய திமுக உயர்மட்டக்குழு மக்களிடம் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

More articles

Latest article