இன்று மாலைக்குள் நல்ல முடிவை தெரிவிப்பார் கவர்னர்! வைகை செல்வன் பேட்டி!

Must read

சென்னை,

ன்று மாலைக்குள் கவர்னர் நல்ல முடிவை தெரிவிப்பதாக தகவல் கிடைத்துள்ள என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக  தமிழகம் ஸ்தம்பித்து உள்ளது. அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா முதல்வராக பதவி ஏற்க துடித்து வருகிறார்.

இதுகுறித்து தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இதுவரை எந்தவொரு முடிவும் அறிவிக்கவில்லை. சசிகலா மீது சொத்துகுவிப்பு தீர்ப்பு நாளை அல்லது ஒரு சில நாட்களில் வர இருப்பதால், அதன்பிறகு முடிவு எடுக்கலாம் என்று காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலைக்குள் ஆளுநர் நல்ல முடிவு தெரிவிப்பார்  என்ற நம்பிக்கை இருக்கிறது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11.30 மணி அளவில்,  போயஸ்கார்டனில் பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தை ஆளுநர் காப்பாற்றுவார் என நம்புகிறோம் என்றும் கூறினார். மேலும்  அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக சசிகலா திகழ்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

More articles

Latest article