சென்னை:

மிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி. மற்றும் கமிஷனர் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்தும், முதல்வர் ஓபிஎஸ் இன்று கோட்டைக்கு வருவதாக அறிவித்திருந்தது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், தலைமை செயலகத்தில், இன்று மூத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று பகல், 12 மணிக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமை செயலகம் வர உள்ளார். இதன் காரணமாக ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும்  தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.