சென்னை

தெலுங்கானா சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கிறது

வரும் 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

தற்போது தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 30-ல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று திமுக தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   வரும் 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள தெலுங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு, தெலுங்கானாவில் உள்ள அனைத்து திமுக பிரிவுகளும், தொண்டர்களும் தேர்தல் பணிக்குழுவை அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஐ.என்.டி.ஐ.ஏ. தொகுதி வேட்பாளர்கள்  அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.