Skip to content
  • Thu. Sep 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

பாரத்பந்த்: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்…

Dec 8, 2020

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாரத்பந்த்-க்கு ஆதரவாக திமுக இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. சென்னையில் மட்டும் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். தலைநகரில் 13வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில்,   இன்று நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதையடுத்து, இன்று நாடு முழுவதும் பந்த் நடைபெற்று வருகின்றனர்.

தமிழகத்தில், மாநில அரசு விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக செயல்படுவதால், தடையை மீறி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர்.  தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி. உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினரும், விவசாயிகள் சங்கத்தினரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில், ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளன. சில இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டு உள்ளன.

சென்னையில் திமுக  மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றன.

சென்னையில் 27 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மத்திய குழு உறுப்பினர் கே.ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரம்பூர் அம்பேத்கார் கல்லூரி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு சுதர்சனம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அம்பத்தூர் பஸ் நிலையம், ஆவடி அண்ணா சிலை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இதற்கிடையே இன்று காலை சென்னையில் உள்ள 36 போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

முழு அடைப்பு காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் 10 ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத்பந்த்: நாடு முழுவதும் ஆங்காங்கே சாலைமறியல், ரயில் மறியல், போக்குவரத்துபாதிப்பு -புகைப்படங்கள்

Post navigation

பாரத் பந்த் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்! ஸ்டாலின்…
சென்னை சேலம் 8வழிச்சாலைக்கு அனுமதி; அரசாணைக்கு தடை! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம்…

Related Post

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer