சென்னை:

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் திமுக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கவில்லை என்பது வருந்தத்தக்கது என்று திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஜெ.தலைமையிலான அதிமுக அரசு இடஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்திய போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பாராட்டு தெரிவித்தவர் கீ.வீரமணி. பின்னர் அவருடன் திமுகவுடன்னான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், தற்போது  திமுக, அதிமுக வெளியிட்டுள்ள  வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படாதது வருந்தத்தக்கது, வேதனை அளிக்கிறது என்று கூறி உள்ளார்.

தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல், முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியவர், மோடி தலைமையிலான பாசிச, ஜனநாயகத்துக்கு விடை கொடுக்கக்கூடிய நேரம்…. எனவேதான் அந்த கூட்டணியை தோற்கடிக்கவே திமுக கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

மோடியின் ஆட்டியில்  வேலையில்லா திண்டாட்டம்  6.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறியவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார் மோடி. அதை செய்யவில்லை. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், நாடு வளர்ச்சி அடையவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் தோல்வி. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கிக் கடன் செலுத்துவதில் அதானி, அம்பானிக்கு விதிவிலக்கு. டிராக்டர் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகள் மீது நெருக்கடி இப்படி ஏழை மக்களுக்கு எதிரான ஆட்சியையே நடத்தி வருகிறார் என்பதால் மோடி அரசை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறியுள்ள  திமுக, அதிமுக கட்சிகள் தற்பொது வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வில்கூட அந்த இடஒதுக்கீட்டை பின்பற்ற முன்வரவில்லை என்று அதிருப்தி தெரிவித்தவர்,  கட்சிப் பொறுப்புகளில் மகளிர், சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கப்படாதது வருந்தத்தக்கது,  வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறியவர், வரும்  26-ம் தேதி நாகை தொகுதியில் தொடங்கி, ஏப்ரல் 16-ம் தேதி தஞ்சையில் முடிக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.