வேட்பாளர் குறித்து பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்: எச்.ராஜா

Must read

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாஜக தனது வேட்பாளர் உத்தேச பட்டியல் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேட்பாளர்கள் யார் என்பது  குறித்து பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகளில் பாஜக தனியாக களமிறங்கு கிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்து வரும் நிலையில், நேற்று மாலை திடீரென பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாயின. சமூக வலைதளங்களிலும்வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வேட்பாளர் பட்டியலை பாஜகவினரை வெளியிட்டிருப்பதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,  பாஜக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு, வியூகங்கள் அடிப்படையிலேயே வெளியாகி உள்ளது. வேட்பாளர்கள் விவரம் குறித்து பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கூறி உள்ளார்.

More articles

Latest article