சென்னை:

மிழக முதல்வராக எடப்பாடி பன்னீர்செல்வம் பதவி ஏற்றதை தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இதையடுத்து முதல்வராக பதவி ஏற்றுள்ள எடப்பாடிக்கு 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக  நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மைய நிரூபிக்க இருக்கிறார்.

இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை திமுக தலைமை கூட்டியுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு   சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெற உள்ளது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சட்டப்பேரவையில் யாருக்கும் ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.