ஜல்லிக்கட்டு போராட்ட தடியடி: மதுரையில் நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணை

Must read

சென்னை,

ல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரியதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பிப்ரவரி 9ந்தேதி நீதிபதி ராஜேஷ்வரன் தனது விசாரணையை தொடங்கினார்.

முதலில் சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில்  நடைபெற்ற  வன்முறை தொடர்பான விசாரணையை தொடங்கினார். அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

வன்முறையாளர்கள் மற்றும் போலீசாரார்  கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நேரில் ஆய்வு நடத்தினார். மீன்சந்தை பகுதிகளில் மீனவர்களிடமும், அங்குள்ள வணிகர்களிடமும் வன்முறை குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் கேட்டு அறிந்தார். மேலும் ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார் தரலாம் எனவும் அறிவித்தார்.

தொடர்ந்து தற்போது மதுரை பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தடியடி நடந்த பகுதியான மதுரை தல்லாக்குளத்தில் விசாரணையை தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து மதுரையில் ஒய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறியதாவது,

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக அதிகாரிகள் சொல்வதை மட்டும்  நான் கேட்டுக்கொன்டு போகமாட்டேன். தற்போது களஆய்வு மட்டுமே செய்துவருகிறேன். விசாரணை எதுவும் நடத்தவில்லை. விரைவில் விசாரணை நடத்துவேன் என்றார்.

 

மேலும்  விசாரணை அறிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு பின் அரசிடம் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து  அலங்காநல்லூர், கோவை பகுதிகளுக்கும்  நேரில் சென்று விசாரணை நடத்துவேன் என்றும் கூறினார்.

 

More articles

Latest article