சென்னை: திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தானே விசாரிப்பேன் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல் செயல்படுகிறது என கடுமையாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திமுக அமைச்சர்கள் மீதான வழக்கை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்குகளை நானே விசாரிப்பேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், திமுக அரசு கடும் அதிருப்தி அடைந்தது.

இந்த நிலையில், நீதிபதி வெங்கடேசை சுழற்றி முறையில் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் உயர்நீதிமன்ற  பதிவாளர் அறிவித்து உள்ளார்.  அதுபோல, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் விசாரிக்கும் வழக்குகளும் சுழற்றி முறையில் மாற்றப்பட்டு உள்ளன.

இதனால், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்த முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள், நீதிபதி ஜெயச்சந்திரனிடம் செல்கிறது. இந்த வழக்குகளை, அடுத்த 3 மாதங்களுக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளார். அதுபோல செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யபட்டுள்ளதால், அவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தை நாடினால், அந்த ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்புதான் விசாரணைக்கு வரும்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,   அடுத்த மூன்று மாதங்களுக்கு எம்.பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றப்படுவதுடன், அவர்கள் விசாரித்த வழக்குகளும் மாற்றப்படும். அதன்படி, அக்டோபர் முதல் டிசம்பர் வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க உள்ள நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுழ.

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!