சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசியின் 2வது டோஸ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  இவை 2 டோஸ்களாக ஒரு மாத இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அதன்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 9ந்தேதி அன்று சென்னை மந்தைவெளியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.

இந்த நிலையில்,  இன்று, 2வது டோஸ் தடுப்பூசியை காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்! நம்மையும் – நாட்டு மக்களையும் பாதுகாப்போம்! என தெரிவித்துள்ளார்.