சென்னை: தமிழகத்தின் தெற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக திமுக எம்.பி. கனிமொழியை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது. மேலும்,  தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில்,  தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,  தமிழகத்தின் தெற்கு மண்டலத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல தேர்தல் பொறுப்பாளராக மு.சண்முகம் எம்.பி.,

வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி,

மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக தயாநிதிமாறன் எம்.பி.,

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தேர்தல் பொறுப்பாளராக ஆ.ராசா எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மேலும் ஒவ்வொரு தொகுதி வாரியாகவும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொளத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக கி.நடராஜன்,

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக ஏ.சரவணன்,

துறைமுகம் தொகுதி பொறுப்பாளராக தமிழன் பிரசன்னா,

பல்லாவரம் தொகுதி பொறுப்பாளராக மீ.அ.வைத்தியலிங்கம்

மயிலாப்பூர் தொகுதி பொறுப்பாளராக குமரி விஜயகுமார்,

ராயபுரம், பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக காசிமுத்து மாணிக்கம்,

ஆர்.கே.நகர். தொகுதி பொறுப்பாளராக சுபா.சந்திரசேகரன்,

மதுரவாயல், அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளராக பி.டி.சி. ஜி.செல்வராஜ்

அண்ணாநகர் தொகுதி பொறுப்பாளராக சி.எச். சேகர்,

திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளராக துறைமுகம் காஜா,

மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக டாக்டர் ஆர்.டி.அரசு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.