சென்னை: திமுக அரசு வழங்கிய ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள் இல்லை என்றும், ஏமாற்றம் அளிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக  16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழக வளர்ச்சி குறித்து பல்வேறுஅறிவிப்புகளை ஆளுநர் உரையில் தெரிவித்துள்ளது.

ஆளுநர் உரை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,

திமுக அரசு வழங்கிய ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது,  முக்கிய அம்சங்கள் ஒன்னும் இல்லை. தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது, நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கூறுகிறதுதிமுக அரசு, மேலும் நீட் தேர்வு குறித்து கமிட்டி அமைத்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல் என்று கூறியவர்,

விவசாயிகள் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து குறித்த அறிவிப்பு இல்லை;

5 சவரன் வரை நகைக் கடன் ரத்து என்னும் திமுகவின் வாக்குறுதி தொடர்பான அறிவிப்பும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திமுக,அதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதியும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழக்குவதற்காக தேர்தலுக்கு முன்னதாக திமுக கொடுத்த வாக்குறுதி பற்றிய அறிவிப்பும் இல்லை

கூட்டுறவு சங்கங்களில் ரத்து செய்யப்பட்ட கடன்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை சரியாக மேற்கொள்ளவில்லை. கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றன.