விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; சிறுவன் உள்பட 3 பேர் பலி…

Must read

சாத்தூர்: விருதநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிறுவன் 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது. இங்கு பல வீடுகளிலேயும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பல ஆலைகள் விதிகளை பின்பற்றாத காரணத்தால் அவ்வப்போது வெடிவிபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. தொடர்கதையும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தினாலும், அதை கடைபிடிக்காததால் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

இந்த நிலையில்,  இன்று காலை சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து நேர்ந்தது. இதில் அருகே இருந்த  5 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து நேர்ந்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

More articles

Latest article