வேலுர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,  10வது தடவையாக மீண்டும் சட்டமன்றம் செல்கிறார். இதுவரை 12 முறை தேர்தலில் போட்டியிட்ட நிலையில் 10முறை வெற்றி பெற்றுள்ளார்.

திமுக பொதுச்செயலாளராக உள்ள துரைமுரகன், முதன்முதலாக கடந்த  1971-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதையடுத்து முதன்முறையாக  சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து,  1977, 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால்,  1984-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் காட்பாடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  ஆனால், அடுத்து நடைபேற்ற  1989ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் யி காட்பாடியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார்.

பின்னர்  1991-ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் அ.தி.மு.க.விடம் தோல்வி அடைந்த துரைமுருகன் அதன்பிறகு நடைபெற்ற  1996, 2001, 2006, 2011, 2016 என்று தொடர்ந்து வெற்றி பெற்றார். இதுவரை 9 முறை வெற்றிபெற்றுள்ள துரைமுருகன், தற்போது நடைபெற்ற (2021) சட்டமன்ற தேர்தலில் கடும் இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராமு 84394 ஓட்டுகள் பெற்றார். 746 ஓட்டு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி வாகை சூடியுள்ள துரைமுருகன் 10வது முறையாக வெற்றிபெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து,  10-வது முறையாக  அவர் சட்டசபைக்கு  மீண்டும் செல்கிறார்.

துரைமுருகனின் சாதனையை அவரது ஆதரவாளர்கள்  கொண்டாடி மகிழ்கின்றனர்.