சென்னை,

ட்டசபை அமளியை தொடர்ந்து சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கையும் சேதமடைந்தது. அதையடுத்து சபாநாயகரை சபை காவலர்கள் பத்திரமாக அழைத்துச்சென்றனர்.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் அணியினிரும், எதிர்க்கட்சியினரும் கோரிக்கை விடுத்தனார்.

ஆனால், வாக்கெடுப்பு எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை” என சபாநாயகர் தனபால் கூறினார். இதையடுத்து சபாநாயகரை முற்றுகையிட்டு எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும்,  வேறொரு நாளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் கோரிக்கை வைத்தனர்.

அமளி காரணமாக சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கையும்  சேதமடைந்தது.

இதையடுத்து சபையை மதியம் 1 மணி வரை ஒத்தி வைப்பதாக தனபால் அறிவித்தார்.

பின்னர் மதியம் சபை கூடியதும் திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

அப்போது சட்டப்பேரவை மாண்புகளை குலைத்ததால் திமுகவினர் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்ததாக கூறினார்.