குடியரசுத்தலைவர் ஆட்சி தேவை! ஆச்சார்யா கோரிக்கை

Must read

பெங்களூரு,

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்ற மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

இதன் காரணமாக  மறைந்த ஜெயலலிதா தவிர மற்ற 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக ஓபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவினரும், சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் குழப்பம் குறித்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கு எதிராக வாதாடி தண்டனை வாங்கிக்கொடுத்த கர்நாடக வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறியதாவது,

தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில்  3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும்,

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சுயமாக சிந்தித்து நம்பிக்கை வாக்கில் பங்கேற்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என்றும் கூறியுள்ளார்.

More articles

Latest article