மக்களை புறக்கணித்த கட்சி திமுக: தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி சரமாரி குற்றச்சட்டு

Must read

சென்னை:

க்களை திமுக புறக்கணித்து வருவதாக, தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பேசிய  முதல்வர் கூறினார்.

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  இன்று காலை சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் ஜெயவர்தனுக்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரித்து வந்தார். தொடர்ந்த  கந்தன்சாவடியில் பகுதியில் முதல்வர் பொதுமக்களிடையே பேசினார்.

அப்போது, அதிமுக கூட்டணியில் உள்ள  கட்சிகள் அனைத்தும் கொள்கை பிடிப்புள்ள கட்சிகள். மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் கட்சிகள் என்று கூறியவர், காவிரி பிரச்னைக்காக அதிமுக பார்லிமென்ட்டை முடக்கியது. ஆனால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக வலியுறுத்தவில்லை என்று திமுக மீது குற்றம் சாட்டினார்.

திமுக பொது மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை என்றும்,  மத்திய ஆட்சியில் பங்கேற்றி ருந் போதும், காவிரி பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியவர்,  திமுகவிற்கு அதிகாரம் தான் முக்கியம்.

திமுக குரல்கொடுக்காததால், மக்கள் அவதிப்பட்டனர். அவர்களுக்கு கண்ணுக்கு மக்கள் நலன்  தெரியவில்லை என்றவ்ர,   மக்களை புறக்கணித்த கட்சி திமுக என்றும், மக்களை பற்றி ஸ்டாலினுக்கு தெரியாது என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

தான் உழைப்பால் உயர்ந்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றவர்,  ஸ்டாலின் கருணாநிதியின் மகன் என்பதால் மட்டுமே திமுகவின் தலைவராக உள்ளார் என்றும் கூறினார்.  உழைப்பால் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு மட்டுமே, கட்சி மற்றும் மக்கள் பிரச்சினை குறித்து தெரியும் என தெரிவித்துள்ளார்.

மத்தியில் நிலையான, உறுதியான பிரதமர் தேவை. இதற்கு மோடி தான் பொருத்தமானவர்.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article