சென்னை:

மிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக  அமோக வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களான தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக தலைமையகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 2வது கட்டமாக ஏப்ரல் 18ந்தேதி தமிழ்நாட்டில் 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து ஏப்ரல் 19ந்தேதி 4 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை வந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் தமிழக்ததில் தேர்தல் நடைபெற்ற 38 நாடாளுமன்ற தொகுதியில் 37ஐ திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக திமுகவினர் உற்சாகத்தில் மகிழ்ச்சியை வெடி வெடித்தும்,  இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தலைவர்களும்,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும்  திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.