தலைவணக்கம் தமிழகமே; மகத்தான வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி! ஸ்டாலின்

Must read

சென்னை:

நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பெருவெற்றி பெறவைத்ததற்கு தமிழக மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின்  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதில்,

“தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்”  

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article