திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா

Must read

திருச்சி

திமுக கூட்டணி சார்பாக பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மமக தலைவர் ஜவாஹிருல்லா  கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார்.

வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அணி, மநீம அணி, அமமுக அணி, நாதக கட்சி  இடையே மோதல் உள்ளது.

திமுக அணியில் இடம் பெற்றுள்ள மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியில் போட்டியிடுகின்றார்.  தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவ்வகையில் ஜவாஜிருல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையொட்டி அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More articles

Latest article