பெங்களூரு
கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என டி கே சிவக்குமார் கூறி உள்ளார்.
கர்நாடக அரசுக்குக் காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு நீர் திறக்காமல் உள்ளது. இதையொட்டி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆயினும் கர்நாடக அரசு தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து விடத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
நேற்று தமிழக சட்டசபையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தமிழகத்திற்குப் போட்டியாகக் கர்நாடக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார்,
“தற்போது கர்நாடகாவில் நீர் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும். நாங்கள் எங்களது விவசாயிகள் நலனைப் பாதுகாக்க வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்..