movies

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களை பொறுத்தவரை மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஒரு வேலை பெரிய நட்சத்திரங்கள் படம் எதுவும் வெளியாகாததால், இந்த சோகம் என கோலிவுட்டில் கூறப்படுகின்றது.

தீபாவளிக்கு மொத்தம் 4படங்கள் வெளியானது அதில் இரண்டு படங்கள் ரசிகர்கள் உள்ள நடிகர்களின் படம் மற்ற இரண்டு வெளியானது மக்களுக்கு மட்டும் தெரியாது என நினைக்கின்றோம் அந்த அளவுக்கு அமைதியாக தீபாவளி ரேசில் இருந்து வெளியேறியுள்ளது.

கொடி, காஷ்மோரா ஆகிய இரண்டு படங்களும் தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட தலா 400 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என கூறப்படுகின்றது. அதில் காஷ்மோரா திரைப்படம் முதல் நாள் வசூல் சுமாராக 5கோடி வசூல் செய்துள்ளதாகவும், கொடி திரைப்படம் 4கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது அது மட்டுமல்ல இந்த இரண்டு திரைப்படங்களும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..

கார்த்திக் தெலுங்கில் ஒரு முன்னணி நடிகர் என கூறுகின்றது ஆந்திர ஊடகங்கள் அப்படி இருக்கும் போது அவரின் காஷ்மோராவுக்கு அங்கு செம்ம வரவேற்பாம் ஆகையால் இந்த படம் இரண்டு மொழிகளிலும் சேர்த்து முதல் நாள் மட்டும் 10 கோடி வசூல் செய்துள்ளதாம்.

தனுஷுக்கு ஆந்திராவில் அந்த அளவுக்கு மவுசு இல்லாததால் கொடி படத்துக்கு வரவேற்ப்பு சற்று குறைவுதானாம் இந்த படம் முதல் நாள் மட்டும் இரண்டு மொழிகளிலும் சேர்த்து 6 கோடி வசூல் செய்துள்ளது.

எது எப்படியோ இன்று வரை வசூலித்ததை வைத்து பார்த்தால் இந்த இரண்டு படங்களும் தப்பித்து விட்டது என கூறுகின்றது கோலிவுட் வட்டாரம்…