சென்னை: 
ரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கியது. கடந்த ஆண்டு குரோதம் காரணமாக அதிகபட்சமாக 10 சதவீதம் போனஸ் மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. 2,87,250 தொழிலாளர்களுக்கு ரூ.215.38 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.