சென்னை: 
நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகம் மூடப்படுகிறது என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றும் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. இதில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணம் இல்லை என்று அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை நீக்கம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்க காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்,நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகம் மூடப்படுகிறது என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா உணவகங்கள் என்பது ஏழை எளிய மக்களுக்கான உணவகங்கள். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிதி நெருக்கடியால் நிறுத்தப்படுவது ஏற்புடையது அல்ல. எனவே நிதிநிலையைக் காரணம் காண்பித்து படிப்படியாக அம்மா உணவகத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது . அதனை விரிவுபடுத்த வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.