சென்னை: செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், வழக்கின் 3வது நீதிபதியாக   சி.வி.கார்த்திகேயன்-ஐ நியமனம் செய்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவர் நெஞ்சுவலி என கூறியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், செந்தில்பாலாஜியை கைது செய்தது,  சட்டவிரோதம் என கூறி,   அவரது மனைவி மேகலா  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இநத்  ஆட்கொணர்வு மனுவின் மீதான வழக்கில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  இதில், நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்றும், மற்றொரு நீதிபதி பரதசக்ரவர்த்தி, செந்தில் பாலாஜியைசிறையில் அடைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இதனால், இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கி,  உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்தியேனை 3வது நீதிபதியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு ஓரிருநாளில் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…