பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்குகள் திறக்கப்படுவதும் தள்ளிக்கொண்டே போகிறது.

இதனால் ‘டெனெட்’, ‘கான்ஜூரிங் 3’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் 21-ம் தேதி அன்று வெளியாகவிருந்த ‘முலன்’ திரைப்படத்தைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது டிஸ்னி நிறுவனம்.

இந்நிலையில் ‘முலன்’ படத்தைப் பார்க்க விரும்புவர்கள் அந்தப் படத்துக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி டிஸ்னி + ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று டிசனி அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இதற்கான கட்டணம் 30 டாலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.