பிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்குக் கரோனா தொற்று உறுதி….!

Must read

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் , விஷால் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

இந்நிலையில் இவருக்கு நேற்று (ஆகஸ்ட் 4) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ஸ்மிதா

“நேற்று மோசமான நாள். நேற்று உடலில் வலி ஏற்பட்டது. கடுமையாகச் செய்த உடற்பயிற்சியால் வலி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கும் சஷாங்குக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் பெரிதாக இல்லை. கரோனாவை விரட்டி, பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் பாதுகாப்பாக வீட்டில்தான் இருந்தோம். ஆனாலும், கரோனா எங்களைத் தேடி வந்துவிட்டது”.என ஸ்மிதா தெரிவித்துள்ளார்.

More articles

Latest article