டெல்லி:

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, மற்றும் மோதல் தொடர்பாக அனைத்துக்கட்சித் தலைவர்க ளுடன் வரும்  19ந்தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் மாநிலம் லடாக் கால்வான் பகுதியில் உள்ள இந்திய சீன எல்லைப்பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம்நிலவி வருகிறது.

இந்த சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்த விஷயத்தில் மோடி மவுனம் காப்பது ஏன்? அவர்களுக்கு நமது வீரர்களை கொல்ல எவ்வாறு தைரியம் வந்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கிடையில்  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன்  பிரதமர் மோடி  ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் ,இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 19 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளாளர்.

காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.