கிரீடம் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி.

இவரின் தெய்வ திருமகள் , தலைவா படங்களில் நடித்த அமலாபாலை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

விவாகரத்துக்குப்பின், அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதேபோல் விஜய்யும் டைரக்டு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் 2-வது திருமணத்துக்கு சம்மதித்து இருக்கிறார். அவர் மணக்க இருக்கும் பெண்ணின் பெயர், ஐஸ்வர்யா. சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள். இவர், ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டர். பொதுநல மருத்துவராக இருந்து வருகிறார்.

டைரக்டர் விஜய், டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடக்கிறது.