ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘கொலைகாரன்’.

தமிழ்நாட்டில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பாளர்கள் கடும் போட்டி போட்டுகொண்டு இருக்கிறார்கள் .

2 கோடிக்கும் அதிகமாக ஹிந்தி ரீமேக் விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு ரீமேக் உரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.