மிழ்நாட்டிலிருந்து வடக்கு பக்கம் சென்றால் அங்குள்ளவர்கள் நம்மை அழைப்பது மதாராஸி என்றுதான். இந்தி பேசுவதில்லை என்பதால் இப்படியொரு பட்டத்தை வடக்கு வாசிகள் கொடுத்திருக் கிறார்கள். தேசிய விருது வென்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனுக்கு டெல்லி விமான நிலையத்தில் நடந்த கொடுமையை பற்றி அவர் சமீபத்தில் வாய் திறந்திருக்கிறார். அது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


வெளிநாட்டு கலைவிழாவுக்கு சென்று விட்டு வெற்றி மாறன் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கிருந்த அதிகாரி ஒருவர் வெற்றி மாறனிடம் ஏதோ கேள்வி கேட்க அதற்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னார். அதை காதில் வாங்காத அதிகாரி இந்தி தெரியாதா, இந்தியாவின் தாய் மொழி தெரியாமலிருக்கிறீர்களே. தமிழர்களும், காஷ்ரீகளும்தான் இந்தியாவின் ஒற்றுமையை குலைக் கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு வெற்றிமாறன், என் தாய் பேசும் மொழி தமிழ். தமிழ்தான் என் தாய் மொழி என்று கூற அதைக்கேட்டு அந்த அதிகாரி கோபம் அடைந்து வெற்றி மாறனை 45 நிமிடம் ஓரமாக நிற்க வைத்தார். உடன் வந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் அதை அந்த அதிகாரி காதில் வாங்கவில்லை. பின்னர் வேறுவொரு அதிகாரி வந்து வெற்றி மாறனை அனுப்பி வைத்தார்.
வெற்றி மாறனுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் இப்படியொரு அவமானம் அவருக்கு நேர்ந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.