இயக்குநர் ஹரியும் சம்பளத்தைக் குறைத்தார்..

Must read

இயக்குநர் ஹரியும் சம்பளத்தைக் குறைத்தார்..

ஊரடங்கு காரணமாகத் தமிழ் சினிமா உலகமும், உறங்கிக் கொண்டிருக்கிறது.

படப்பிடிப்புக்கு பிந்தைய ‘போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகளை ( எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு) தொடங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

அனுமதி கிடைத்ததும்,அந்த வேலைகளை ஆரம்பிக்கும் கையோடு, சில படங்களின் ‘ஷுட்டிங்’ கை தொடரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

’’அதிக சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், தங்கள் ஊதியத்தைக் குறைத்துக் கொண்டால் சினிமா உலகம் மீண்டு வர உதவியாக இருக்கும்’’ என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று, இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

இப்போது விஜய் ஆண்டனி 3 படங்களில் நடித்து வருகிறார். மூன்று படங்களுக்கும், தனது ஊதியத்தில் 25 % குறைத்துக் கொள்வதாகக் கூறி இருந்தார்.

இந்த நிலையில், ஐயா, சாமி, சிங்கம் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ஹரியும், தனது சம்பளத்தில் 25 % குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அவர் தற்போது சூர்யா நடிக்கும் ‘அருவா’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி, ஹரி பாதையில் ஏனைய ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள், சம்பளத்தைக் குறைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

– ஏழுமலை வெங்கடேசன்

More articles

Latest article