திருப்பதி

ரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக இலவச தரிசனம் செய்ய அனுமதிக்க ஆலோசனை நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடி இலவச தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.  தற்போது இணையம் மூலம் இலவச தரிசன டிக்கட்டுகள் பெறுவோர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.  இதனால்  சமீபத்தில் பாதயாத்திரையாக வந்த பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிப்ரவரி மாதத்துக்கான இலவச தரிசன சீட்டுகள் தினசரி 10000 டிக்கட்டுகள் வீதம் இணையம் மூலம் நேற்று முதல் வெளியிடப்பட்டது.  நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த பதிவு 8 நிமிடங்களில் முடிவடைந்தன.    இந்த கால கட்டத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 தேதிகள் வரையிலான டிக்கட்டுகள் மட்டுமே வெளியாகின.

இது குறித்து திருப்பதி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர், “மருத்துவ நிபுணர்கள் வரும் பிப்ரவரி 15 முதல் கொரோனா தொற்று குறையும் என அறிவித்துள்ளனர்.   இதனால் பிப்ரவரி 15க்கு பிறகு பக்தர்களை நேரடியாக இலவச தரிசனம், செய்ய அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.