ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக தினேஷ் பிரதாப் சிங் போட்டி…

Must read

லக்னோ:

.பி. மாநிலத்தில், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், அவரை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப்சிங் போட்டியிடுவார் என்று என்று  பாஜக தலைமை அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக தலைமை அவ்வப்போது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியான  6 வேட்பாளர்கள் பட்டியலில் ரேபரேலி தொகுதியில், தினேஷ் பிரதாப்சிங் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும்  பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிர பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை பாஜக அறிவித்து உள்ளது. அதுபோல,  உ.பி.யின் அசம்கார் தொகுதியில்  போட்டி யிடும் அகிலேஷ் யாதவை எதிர்த்து போஜ்பூரி நடிகர் மற்றும் பாடகரான தினேஷ் லால் யாதவும், மெயின்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவை எதிர்த்து பிரேம் சிங் ஷக்யாவும் போட்டியிடுகின்றனர்.

தினேஷ் பிரதாப் சிங் முன்னாள் காங்கிரஸ் எம்எல்சி ஆவார். இவர் சமீபத்தில் உ.பி. முதல்வர் யோகி முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த நிலையில், அவருக்கு சோனியாவை எதிர்த்து போட்டியிடும் வாய்பை பாஜக வழங்கி உள்ளது.

More articles

Latest article