தினகரன் டில்லிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்?

Must read

சென்னை::

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில் விசாரணை செய்ய, டிடிவி தினகரன் இன்று டில்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசார் வழக்கு பதிந்திருக்கிறார்கள்.

 

இது குறித்து தினகரனை விசாரிக்க டில்லி உதவி ஆணையர் சஞ்சய் தலைமையில் நேற்று டில்லி போலீசார் சென்னை வந்தனர். நேற்று இரவு தினகரனுக்கு சம்மன் அளித்தனர். பிறகு காவல் ஆய்வாளர்  நரேந்திரசஹால் தவிர பிறர் டில்லி சென்றுவிட்டனர்.

தினகரனை விசாரணைக்கு டில்லி அழஐத்துச்செல்வதறஅகாக நரேந்திரசஹால் சென்னையிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 22ம் தேதி தினகரன் டில்லி அழைத்துச்செல்லப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

More articles

Latest article